மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் – எதற்காக தெரியுமா?

Photo of author

By Parthipan K

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் புதிதாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். அது என்னவென்றால் “பசுக்களை பாதுகாப்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அவரின் அறிக்கையில், “பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வீடு மற்றும் உழவர் நலத் துறைகள், பஞ்சாயத்து, வனம், ஊரக வளர்ச்சி ஆகிய அனைத்தும் அந்த அமைச்சகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைச்சகம் உருவாக்குவது குறித்து கேட்டபோது, ‘விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டதாகவும், பொதுமக்களும் இந்த அமைச்சகத்தின் மூலம் பயன் பெறுவர்’ என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘வருகின்ற 22ஆம் தேதி அகர் மால்வா மாவட்டத்திலுள்ள, சலரியாவில் இருக்கும் பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்பதனை தெரிவித்துள்ளார்.