ஜெய்லர் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்!  அட இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

0
200

ஜெய்லர் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்!  அட இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

ரஜினியின் ஜெய்லர் படத்தில் புதிதாக பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில்  பிரபல பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாக்கியது.  இதையடுத்து பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லன் வேடத்தில் நடிக்க இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதற்கு முன்பு ஆரண்ய காண்டம் விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களில் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்லர் திரைப்படத்தில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.