ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

Photo of author

By Rupa

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

Rupa

TN Govt Anounced New Restrictions for State Entry

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக நமது தமிழகத்தில் ஒட்டின்னியாகவே வாழந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இது முதல்,இரண்டு மற்றும் மூன்று என படிப்படியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.அந்தவகையில் கேரளாவில் சென்ற 11 நாளில் மட்டும்2.17 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது.

அதனால் அம்மாநில அரசு மக்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை அம்ப்படுதியுள்ளனர்.அந்தவகையில் தற்போது பொதுமக்கள் சந்தைகள்,வங்கிகள், பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் ஓர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.அவ்வாறு செலுத்தவில்லை என்றால் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆட்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையை சமர்ப்பிக்க வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடாத இடங்களில் கடைகள் திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி தந்துள்ளனர். சுந்திர தின விழா மற்றும் ஓணம் பண்டிகை அன்று முழு ஊரடங்கு கிடையாது.பள்ளி மற்றும் கல்லூரிகள், திரையரங்குகள் போன்றவை இயங்க தடை விதித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பொருட்களை டெலிவரி செய்ய மட்டுமே மால்கள் திறக்க அனுமதி அளித்துள்ளனர்.மக்கள் நேரடியாக சென்று மால்களில் பொருட்களை வாங்க இயலாது.திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.அதுமட்டுமின்றி வழிபட்டு தளங்களில் 40 பேருக்கு குறைவாகவே தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளனர்.

வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படலாம் என கூறியுள்ளனர்.அதே போல தமிழ்நாடு போன்ற இதர மாநிலங்களிலும் கொரோனா மூன்றாவது அலையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகுமானால் முழு ஊரடங்கு போடப்படும் நிலை ஏற்படும்.