திருமணம் குறித்து பரவிய செய்திகள்!!! லியோ பட ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!!!

0
110
#image_title

திருமணம் குறித்து பரவிய செய்திகள்!!! லியோ பட ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!!!

நடிகை திரிஷா அவர்களின் திருமணம் குறித்து பரவிய செய்திகள் எதுவும் உண்மை கிடையாது என்று நடிகை திரிஷா அவர்கள் லியோ திரைப்பட ஸ்டைலில் பதில் அளித்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகால சினிமா வாழ்கையில் நடிகை திரிஷா அவர்கள் தற்பொழுதும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தற்பொழுது நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சில தினங்களாக நடிகை திரிஷா அவர்களின் திருமணம் குறித்து பரவிய வரும் வதந்திகளுக்கு தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நடிகை திரிஷா அவர்களின் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் நடிகை திரிஷா அவர்கள் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதற்கு நடிகை திரிஷா அவர்கள் லியோ பட ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

திருமணம் குறித்த வதந்திகளுக்கு நடிகை திரிஷா அவர்கள் “அன்பர்களே நீங்கள் யார், உங்களின் ஜோடி யார் என்பது உங்களுக்கே தெரியும். வதந்திகளை பரப்புவது நிறுத்திவிட்டு அமைதியாக இருங்கள். சியர்ஸ்” என்று பதில் அளித்துள்ளார்.

தற்பொழுது நடிகை திரிஷா அவர்கள் நடித்துள்ளா லியோ திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில் அதில் ஆங்கிலத்தில் “Keep Calm And” என்ற வாக்கியம் ஒவ்வொரு போஸ்டருக்கும் வந்துள்ளது. அதே போல நடிகை திரிஷா அவர்களும் “Keep Calm and Stop rumouring” என்று பதிவு செய்துள்ளார்.