அயலான் படத்திற்கு அடுத்த சிக்கல்! வருத்தத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.

0
273

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.  அதை அடுத்த அயலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அயலான் திரைப்படம் மிகவும் குறைவான நாட்களை கொண்டே திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இத்திரைப்படம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.

அயலான் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதன்முறையாக ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாக்கும் திரைப்படமாகும்.  இத்திரைப்படம் ஏற்கனவே பல சிக்கல்களைத் தாண்டி படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், சுஷாந்த் தற்கொலை வழக்கில் பதிவாகி சிபிஐ மூலம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

ஏனெனில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், சுஷாந்த் மற்றும் காதலி    ரியாவுடன் நட்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர்களுடன் இணைந்து போதைப்பொருள் எடுத்து கொண்டதாக வழக்கு பதிவாகியுள்ளது. இவ்வாறு கதாநாயகியை ஷூட்டிங்குக்கு வர முடியாத நிலையில் இருப்பது சிவகார்த்திகேயனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

Previous articleகணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!
Next articleஅனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here