அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

விலைவாசி உயர்வினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகின்றது.

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என கூறப்படுகின்றது. மேலும் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தபட்டால் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.

அதனை தொடர்ந்து நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மாதம் சம்பளம் 18000 ஆயிரம் வாங்குபவர்கள் அகவிலைப்படி 9.72 ஆக உயர்த்தப்படும். தற்போது வழங்கப்படும் சம்மபளத்துடன் ஒப்பிடும் பொழுது ஒவ்வொரு மாதமும் 720 வீதம் ஆண்டுக்கு 8640 ரூபாயாக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பாக ஒப்புதல் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.