NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சி நிர்வாகி அபிநயா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சீமான் நாம் தமிழர் கட்சியில் சர்வாதிகாரம் செய்வதாக நிர்வாகிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் முன் அக்கட்சி நிர்வாகிகள் எனத் தொடங்கி மேற்கொண்டு விழுப்புரம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் என அனைவரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்காததுதான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இவ்வாறு கட்சியில் இருப்பவர்கள் விலகுவது குறித்து கேலி செய்யும் வகையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான அபிநயா தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த நான்காண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன். படிக்காத நான் மேடைப்பேச்சாளராக எண்ணி முதன் முதலாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச முயற்சி செய்தேன் முடியவில்லை. மேலும் பெண்களுக்கு 50 சதவீதம் எனக் கூறும் கட்சியில், துணிவுள்ள கொள்கை பிடிப்புள்ள எனக்கு வேட்பாளராக வாய்ப்பும் தரப்படவில்லை.
அத்தோடு தொகுதி பொறுப்பில் உள்ள என் கணவரிடம் சீமான் அவர்கள் நான் பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்தியேக நாற்காலி வாங்க சொத்தை விற்று ஐந்து லட்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கேட்டதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். இதனால் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இந்த பதிவானது அவர் செயல்முறைக்கு எதிர்மறையாக உள்ளதால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால் லோக்சபா மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தல் என இரண்டிலும் இவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை அடுத்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சில அவதூறுகளின் அவதூறுகளை அருவருப்பாகும் செய்திகள் , தான் விழுந்தாலும் தன் இனம் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை ஏற்ற தலைவன் வழி நடக்கும் எங்களை ஒன்றும் செய்யாது.
அண்ணன் வாழும் இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். என் மூச்சு உள்ளவரை அண்ணன் விரல் பிடித்து அரசியலில் பயணிப்பேன் என கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் இதேபோல கட்சியிலிருந்து விலகியவர்களை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.