இன்னும் 10 நாட்கள் தான்! பரபரக்கும் மக்கள் நீதி மையம்!

0
138

தற்போது தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் இந்த இரு கட்சிகளையும் கடந்து ஒரு கூட்டணியை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ இதுவரையில் மக்களிடம் அரசியல் என்ற விதத்தில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத ஒரு நபர் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கி அதனை நகர்த்தி வருவது மாபெரும் சாதனை தான் என்று சொல்லப்படுகிறது.

ஆக இந்த தேர்தலில் கமல்ஹாசனின் கூட்டணி ஆனது வெற்றி பெறுகிறதோ இல்லையோ அதிமுக திமுக என்ற இரண்டு அசைக்கமுடியாத சக்திகளை அசைத்துப் பார்க்கும் விதமாக அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட நினைத்திருப்பது எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.இது ஒருபுறம் இருந்தாலும் நடிகர் கமல்ஹாசனுக்கு இவ்வளவு பெரிய ஜாம்பவான்களை எதிர்த்து நாம் பிரபலமான கட்சியுடனான கூட்டணியில் இருந்து போட்டியிடுவதே பெரிய விஷயம் ஆனால் தனி கூட்டணி அமைத்து களமிறங்குவது சாத்தியமா என்ற பயம் சிறிதும் இன்றி சாதாரணமாகவே செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு ஒரு ஆடியோ மெசேஜை வாட்ஸ்அப் மூலமாக வெளியிட்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது வணக்கம் நல்லா இருக்கீங்களா தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் பத்து தினங்களில் தான் இருக்கிறது. நாம் இவ்வளவு நாள் செய்த வேலைகளுக்கும் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அடுத்த பத்து நாட்கள் நம்முடைய வேலைகளை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தமிழகத்தை தத்து எடுத்துக் கொள்ளுங்கள் மிகமிக உற்சாகத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். என்ன முடியுமோ அதை மட்டும் செய்து விடாமல் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால் வெற்றி நம் வசப்படும் அதையெல்லாம் செய்ய வேண்டும். நம்முடைய கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும் அதே போல நம்முடைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த மெசேஜ் முடியும் நொடியிலிருந்து தாங்கள் தங்களுடைய வேலைகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!
Next articleபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று..! – கவலையில் ரசிகர்கள்