பி.எஸ்.ஜி அணியில் இருந்து மாறும் நெய்மார்… புதிய அணிக்காக விளையாடும் நெய்மார்க்கு இவ்வளவு கோடி சம்பளமா..?
கால்பந்து விளையாட்டில் பிரபலமாக உள்ள கால்பந்தாட்ட வீரர் நெய்மார் புதிய அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் அவருக்கு புதிய அணிக்காக விளையாடவிருக்கும் நெய்மாருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் நெய்மார் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப் அணிக்காக அதாவது பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடி வருகிறார். அதற்கு முன்னர் சான்டோஸ் அணிக்கும், பார்சிலோனா கிளப் அணிக்கும் விளையாடி வந்தார்.
2009 முதல் 2013ம் ஆண்டு வரை சான்டோஸ் அணிக்காக 177 போட்டிகளில் விளையாடிய நெய்மார் 107 கோல்கள் அடித்துள்ளார். பின்னர் 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 68 கோல்களை நெய்மார் அடித்துள்ளார்.
2017ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை பி.எஸ்.ஜி அணிக்காக 112 போட்டிகளில் விளையாடி 82 கோல்கள் அடித்துள்ளார். தற்பொழுது பி.எஸ்.ஜி அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் நெய்மார் அவர்களை சவுதி அரேபியா நாட்டு கால்பந்து நிர்வாகம் தங்களின்(சவுதி அரேபியா) கால்பந்து அணியான அல்-ஹிலால் அணிக்கு விளையாட வைக்க முயற்சிகளை மேற்கொண்டது.
இதையடுத்தா நெய்மார் அவர்களை சவுதி அரேபியா அணிக்கு கொடுக்க பி.எஸ்.ஜி அணி சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து நெய்மார் அவர்களும் சவுதி அரேபியா அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி நெய்மார் அவர்கள் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணிக்காக 2 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் விளையாடவுள்ளார். 2 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் விளையாடவுள்ள நெய்மார் அவர்களுக்கு இந்திய மதிப்பில் 908 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.