10,000 ரூபாய் இருக்கிறதா? வருமானம் ஈட்ட சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

Photo of author

By Sakthi

நாட்டின் வளர்ச்சிக்காக இனி சில்லறை முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய அசத்தலான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் சிறிய அளவிலான முதலீடுகளுக்கு நல்ல வருமானம் பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் உட்கட்டமைப்பு அறக்கட்டளை மத்திய அரசின் தேசிய பணமாக்கள் திட்டத்தை ஆதரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்ட அமைக்கப்பட உள்ள மூன்று சாலைகள் அமைக்கும் பணிக்கான 1430 கோடியை உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் உட்கட்டமைப்பு அறக்கட்டளை 1500 கோடி மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது இதற்கான ஒப்புதல் தற்போது செபியிடம் கோரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதலீடு செய்யலாம் ஒரு nctயின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் பத்து என் சி டி ஐ வாங்க வேண்டும்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக தெரிவிக்கும்போது மத்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் 24 ஆண்டுகள் நீண்ட கால முதிர்வு கொண்ட மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலமாக என்.சி.டிக்கள் மூலமாக உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து 1500 கோடி ரூபாய் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் பங்குகள் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் மூலமாக முதலீட்டாளர்களுக்கு பணம் வட்டியுடன் திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஓபன் மீது அரையாண்டுக்கு ஒரு முறை 7.9% வட்டி செலுத்தப்படும் அது ஒரு வருடத்திற்கு 8.05 சதவீதமாக கணக்கிடப்படும். இதன் மூலமாக 24 வருடங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்துடன் கணிசமான அளவு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மாற்ற முடியாத கடன் பத்திர வெளியீடு நேற்று முதல் தொடங்கி நவம்பர் மாதம் 7ம் தேதி அன்று முடிவடைய உள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக தெரிவிக்கும்போது தேசிய பணமாக்க திட்டத்தின் கீழ் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பணமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி திரட்டப்பட்ட நிதியை புதிய உட்க்கட்டமைப்புகளை ஏற்படுத்த பயன்படுத்தலாம் இதன் மூலமாக முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் நிதியானது உட்கட்டமைப்பிலே முதலீடு செய்யப்பட்டு ஒரு காலகட்டத்திற்கு பிறகு பணத்தை ஈட்டுத்தொகையுடன் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சாலைகள் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக ரூபாய் 8000 கோடிக்கு மேல் பெறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 2850 கோடி பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது