கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

0
230

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பற்றி அதிகளவில் விமர்சனங்களை வைத்து வருபவர் கவுதம் கம்பீர்.

இந்திய அணி டி 20 உலகக் கோப்பைக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19 ரன்கள் சேர்த்த கோலி, அற்புதமான பீல்டிங்கால் இரண்டு விக்கெட்களை வீழ்த்த காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தற்போது கோலி குறித்து கூறியுள்ள கருத்து, ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது “உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல உதவும் ரன்களை உருவாக்குங்கள், தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.” என அவர் பெயர் குறிப்பிடாமல் கூறினாலும், கோலியைதான் குறிப்பிடுகிறார் என்பது அனைவ்ரும் அறிந்ததே.

இதையடுத்து டிவிட்டரில் ரசிகர்கள் கம்பீரை காட்டமாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கோலி, ஒரு மிகச்சிறந்த டீம் ப்ளேயர். அவர் எப்போதுமே தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்தியதில்லை. எனவே கம்பீரின் இந்த கருத்து தேவையில்லாதது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் பின்ச் எடுத்த சிங்கிளை தடுத்த கோலி, மிகச்சிறப்பான த்ரோ மூலமாக டிம் டேவிட்டை ரன் அவுட் ஆக்கினார். மீண்டும் இதே போல இருபதாவது ஓவரின் மூன்றாவது பந்தில் பேட் கம்மின்ஸ் அடித்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற கோலி சூப்பர் மேன் போல தாவி ஒற்றைக்கையால் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் போட்டியின் முடிவையே மாற்றியது.

Previous article10,000 ரூபாய் இருக்கிறதா? வருமானம் ஈட்ட சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
Next articleஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here