என்னோட 23வது படத்துக்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சி!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பதிவு!!!

Photo of author

By Sakthi

என்னோட 23வது படத்துக்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சி!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பதிவு!!!

Sakthi

Updated on:

என்னோட 23வது படத்துக்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சி!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பதிவு!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களும் பதிவும் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் 21வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தகவல்கள் பரவி வந்தது. அந்த தகவல் தற்பொழுது உறுதியாகி இருக்கின்றது.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இன்று(செப்டம்பர்25) அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகர். சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள அந்த போஸ்டில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர் முருகதாஸ் சார். என்னுடைய 23வது படத்திற்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் கூறிய கதையை கேட்டப் பிறகு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கப் போகின்றது. உங்களுடன் இணைந்து திரைப்படம் நடிப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. மிக்க நன்றிகள் சார். மீண்டும் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்” என்று அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.