
ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறும் உள்ள நிலையில் திமுக அதிமுக என இரு கட்சிகளும் மாற்று கட்சிகளை இணைக்கும் முனைப்பில் உள்ளனர். அதில், அதிமுக கூட்டணி தகர்த்து தன் வசப்படுத்த முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது. வகையில் முக்கிய அமைச்சர் வைத்து பாமக நிறுவனரான ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதிமுக நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சியை தேடி வெளியேறுகின்றனர்.
முன்னதாகவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக பாஜக மேல் மக்களுக்கே ஒரு அதிருப்தி நிலை உள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நின்றாலும் வெற்றி பெற முடியாது என பலரும் வியூகிக்கின்றனர். இதன் முக்கிய காரணத்தினால் தான் மாற்றுக் கட்சியை நாடி செல்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவில் எண்ணற்ற நிர்வாகிகள் எனது நிலையில் தற்போது இரவோடு இரவாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த அறிவிப்பானது இபிஎஸ் தலைமையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே முக்கிய தலைகள் மாற்றுக் கட்சியை நாடி செல்வதால் தங்கள் கட்சியின் மவுசானது குறைந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுக பக்கம் சென்றால் மேற்கொண்டு இவர்களுக்கு பின்னடவை தான் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.