இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! 

Photo of author

By CineDesk

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! 

CineDesk

Night curfew and Sunday curfew canceled !! High Court Judge orders action !!

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆம்  அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. ஆகையால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அரசு, தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 மணிக்கு மேலும் ஞாயிறு கிழமையில் எந்த கடைகளும் திறந்திருக்கக் கூடாது  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்ற நாட்களில் மக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், “இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்”, என உத்தரவிட்டுள்ளார். இந்த விதமான ஊரடங்கு கொரோனா பரவலை எந்தவகையிலும் கட்டுப்படுதுவதில்லை  என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.