இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
146
Night curfew for these people only! Minister announces action!
Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் என்று மாறி மாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இதற்கு அடுத்ததாக தற்பொழுது 11 நாடுகளில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.

இந்த புதிய வகை குறவன் வைரஸ் ஆனது தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இத்தொற்று 11 நாடுகளில் பரவி பெரும் அளவில் மக்களைப் பாதித்து வருகிறது. வைரஸ் ஆனது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரசை விட 50% அதிக அளவு வீரியத்தை  கொண்டுள்ளது என கூறியுள்ளனர். இத்தொற்று பரவுவதால் பதினோரு நாடுகளும் அதிகளவு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்த தொற்றானது எந்த விதத்தில் பரவுகிறது இதற்கு தடுக்க என்ன வழிகள் உள்ளது என்பதை முழுமையாக கண்டறிய இன்னும் ஒரு சில வாரங்கள் எடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதனால் தொற்று பரவிய நாடுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை தற்பொழுது அமல்படுத்தி உள்ளனர். அந்தவகையில் லெபனான் நாட்டில் இத்தொற்றை கட்டுப்படுத்த  குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை  தற்பொழுது அமல்படுத்தி உள்ளனர்.

அது என்னவென்றால், கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை , இரவு 7 மணிக்கு மேல் காலை 6 மணி வரை வெளியே செல்ல தடை விதித்துள்ளனர். இந்த கட்டுப்பாட்டில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளவர்கள் வெளியே செல்லலாம் என கூறியுள்ளனர். இந்த உத்தரவை லெபனான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பிராஸ் அபியாட் என்பவர் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்நாட்டில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சமீபகாலத்தில் தொற்று பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். நமது தமிழகத்தில் தொற்று பாதிப்பை கண்டு இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தி உள்ளார். குறிப்பிட்ட முக்கிய இடங்களான 11 இடங்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அங்கு செல்வதற்கு தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்!
Next articleகட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்!