நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
டெல்லியில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆறு பேரில் ஒருவன் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார் மீதி உள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள ஐந்து பெயரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். முகேஷ் ,பவன் குப்தா ,வினய் சர்மா ஆகிய 3 பேரும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனு அளித்தனர் . இந்த மனுவை 2018 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நான்கு பேரையும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததால் ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகளின் இறுதி வாய்ப்புகள் நிறைவடைந்த நிலையில் மார்ச் மூன்றாம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.