நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு !

0
151

நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் மதுரை பேராசிரியர் முருகன் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதையடுத்து நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து பரிமளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர் பின்னர் மதுரை சிறையில் நிர்மலாதேவி அடைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர் வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற இரண்டாம் தேதி விசாரணை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவி போலீசார் மீண்டும் அழைத்து சென்று மதுரை சிறையில் அடைத்தனர்.

Previous articleயூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ?
Next articleவேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்