திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்

Photo of author

By Parthipan K

திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விதி 370 ஆனது நீக்கப்பட்டு இந்தியா முழுவது ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 30 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்த நிலையில் அனைத்தையும் சமாளித்து பாஜக அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது‌.

இந்த பிரச்சனையை பாக்கிஸ்தான் தீவகரமாக கையிலெடுத்து ஐநா சபை வரை கொண்டு சென்றது ஆனாலும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என அனைவரையும் சமாதானப் படுத்தியது இந்தியா.

இந்த பிரச்சனையை இன்று வரை தொடர்ந்து பேசிவருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவர்கள். அவர் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை பற்றி பேசினார். இதனால் மிகுந்த கொபம் கொண்ட மத்திய பொருளாதாரத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் அவைத்தலைவரிடம் நான் சிறிது நேரம் தமிழில் பேச வாய்ப்பளியுங்கள் என கோரினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் திருமாவளவன் அவர்களே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு உரிமை வழங்கப்படாததை குறித்து இதுநாள் வரை நீங்கள் பேசாதது ஏன்? இன்றைக்கு தலித்துக்களின் உரிமை பற்றி பேசும் உங்களுக்கு ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் எழுதமறுத்தார் என்பது உங்களுக்கு தெரியாதா? என மிகவும் காட்டமான வார்த்தைகளில் பதிலளித்தார்.