கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு!
கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்கப்படுவர்.கொரோனா தொற்று உறுதியானவர்களின் பக்கத்தில் அவர்கள் சொந்தமே அருகில் இல்லாத நிலையில்,மருத்துவர்கள் தான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்து வருகின்றனர்.அவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து தொற்றை கவனிக்கும் போது அம்மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எற்பட்டு விடுகிறது.இதனால் பல பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எவ்வித உறவு இன்றியும் மக்களுக்கு சேவை செய்ததினால் அவர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
இவ்வாறு மக்கள் நலன் கருதி செயல்படும் மருத்துவர்களுக்கு மத்திய அரசாங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டது,அந்தவகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட திட்டம்,மருத்துவ பணியாளர்கள் அதிகப்படியானோர் உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி,50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை வழங்குவதாக தெரிவித்தார்.இதுவரை 287 பேருக்கு மட்டுமே இந்த காப்பீட்டு வழங்கும் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.அதில் கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பிட்டு திட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தனர்.கொரோனாவின் 2வது அலை உருவாகி பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.மருத்துவ ஊழியர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்களை இரவு பகல் பாராமல் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.இதை கூட்டத்தை கூட்டி சொல்லாமல் சைலன்ட்டாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.