நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு!
நிர்மலா சீதாராமன் மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் பாராமதி மக்களவை தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அவருடைய சுற்று பயணமானது நேற்று முன்தினம் முடிவடைந்தது.மேலும் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சொந்த தொகுதி ஆகும்.இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இருந்து வருகிறார். இந்த தொகுதிக்கு நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் அரசியல் ஆதாயங்களுக்காக கூட்டுறவு துறையைச் சுரண்டி வந்தவர்கள் சிலர் உள்ளனர் ஆனால் அவர்கள் அந்த துறைக்கென மத்திய அரசு தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.இந்த சுற்று பயணத்தில் வங்கிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் என வெவ்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.அந்த ஆலோசனையில் கூட்டுறவு துறைக்கு வரிச் சலுகைகள் ,நீண்ட கால கடன் நிலுவைகள் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியை தருகின்றது எனவும் கூறியுள்ளானர்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களை நடைமுறை படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியை வலுப்படுத்தவே இந்த சுற்று பயணம் மேற்கொள்ளப்பாட்டது.இதனையடுத்து பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றது.சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் இறக்குமதி மூலமாக விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.