மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?

Photo of author

By Rupa

மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?

நாட்டில் தினந்தோறும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலந்தோசித்து மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு மகாராஷ்டிரத்தில் தொற்று பரவி வருவதால்  இன்று முதல் முழு ஊரடங்கு அம்மாநிலம் அமல்படுத்தியுள்ளது.இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது மக்களின் உயிரை துச்சமாக நினைப்பது போல உள்ளது.

நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது,அதிக அளவு கொரோனா தொற்று பரவி வந்தாலும் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தாது எனக் கூறியுள்ளார்.அதிக அளவு மக்கள் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகள் போடப்படும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி உலகவங்கி குழு தலைவர் டேவிட் மால்போஸ்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதரமனுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி நிர்மலா சீதாராமன் கூறியதாவது,சென்ற வருடம் ஊரடங்கு போட்டதை போல இந்த வருடமும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது.கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.அந்த ஐந்து திட்டங்கள் என்னவென்றால்,கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது.

இரண்டாவது,கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிர படுத்துதல்.மூன்றாவது,கொரோனா தொற்றை கண்டறிதல்,இந்த கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இவ்வாறு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.அதிக அளவு கொரோனா தொற்று பரவும் நேரத்தில் ஊரடங்கு போட்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.அவ்வாறு செய்தால் பொருளாதாரம் இந்த வருடமும் பாதிக்கப்படும் என நினைத்து இம்மாதிரியான திட்டங்களை நிறுவி வருகின்றனர்.