எனக்கு இவர் தான் இன்னொரு அம்மா என்று மனம் உருகிய நிரோஷா!!

0
81
Nirosha was heartbroken that she is another mother for me!!
Nirosha was heartbroken that she is another mother for me!!

நடிகை நிரோஷா பற்றி நடிகை ராதிகாவும், ராதிகாவை பற்றி நிரோஷாவும் மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய பிணைப்பு அளவு கடந்த அன்பினால் ஆனது என்பது இவர்களுடைய பேட்டியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நிரோஷா தனது பேட்டி ஒன்று கூறி இருப்பதாவது :-

“எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர் என் அக்கா ராதிகா” என்று நிரோஷா தன்னுடைய பேட்டியில் பெருமைபட தெரிவித்துள்ளார்.

என் அக்கா தான் என்னுடைய ரோல் மாடல். என்னை அவர்கள் அதிகம் திட்டுவார்கள் என்றாலும் எனக்கான நல்ல விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் நான் அறிமுகமான அக்னி நட்சத்திரம் படம்கூட அக்கா நடிக்க வேண்டியதுதான். ஆனால் எனக்காக அவர் அந்த படத்தினை விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்த படத்திற்கு அவரே டப்பிங் கொடுத்தார் என்று பெருமை மிக கூறியுள்ளார் நடிகை நிரோஷா.

நடிகை ராதிகா அவர்கள் நிரோஷா குறித்து தன்னுடைய பேட்டியில் கூறியிருப்பதாவது :-

“30 வருஷம் முன்னாடி உங்களையும், நிரோஷாவையும் நான் பார்த்தேன். அதுபோலவே இப்பவும் இருக்கிறீர்கள். உங்களை அக்கான்னு கூப்பிடுகிற மாதிரியே என்னையும் அக்கா என்று தான் நிரோஷா கூப்பிடுவார்கள்.

மேலும், ராதிகா பேசும்போது, “நிரோஷாவை நான்தான் முதலில் போட்டோ எடுத்தேன்.. அந்த போட்டோவை நான் பார்த்து கொண்டிருந்தபோது, கமல் சார் இது யாருன்னு கேட்டாரு. என் சிஸ்டர்னு சொன்னேன். பிறகு, மணிரத்னம் கிட்ட, நிரோஷா போட்டோ தந்து, ராதிகா சிஸ்டர்னு சொல்லியிருக்கார். இதுக்கப்புறம்தான், மணிரத்னம் தன்னுடைய படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் என்று ராதிகா கூறினார்.

இதனை அடுத்து நிரோஷா அவர்கள் என்னுடைய அக்கா தான் எனக்கு எல்லாமே என்று தெரிவித்ததுடன் மட்டுமின்றி, இவர்தான் எனக்கு மற்றொரு அம்மா என்றும் கண் கலங்க கூறியுள்ளார்.

Previous articleபிணவறையில் ப்ரீசரில்  இறந்த உடல் !! எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி!!
Next articleரஜினியின் கேள்விக்கு அவரே அதிர்ந்து போகும் அளவு பதில் கூறிய சத்யராஜ்!!