பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.
இதனிடையே ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் தகவல் வந்துது.
இன்டர்போல், சி.பி.ஐ. உதவியுடன் அவரை கைது செய்ய கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் இதுவரை அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
போலீஸ் தேடினாலும் நித்யானந்தா அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-
பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்தபோது அதற்கான காரணத்தை இன்றும் கூறவில்லை. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர்.
2002-ம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது. எனவே என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும்.
நான் பல விஷயங்களில் ஜெயித்த போராளி என்றும் . நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற ‘டிரண்டு’ உருவாகி உள்ளது. எனது சீடர்கள் நித்தியடி கொடுக்க வேண்டும்.என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.