பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

0
133
Nitish Kumar
Nitish Kumar

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!
Next articleஅதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு