பொதுவாகவே எந்த வகை பூவாக இருந்தாலும் அதன் மணத்திற்கு ஒரு மருத்துவ குணம் உண்டு. அதேபோன்று இந்த பூவிற்கு உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அந்தச் செடி , பூக்கள் மற்றும் வேரின் மருத்துவக் குணங்கள் மற்றும் அது என்ன பூ என்பதையும் காண்போம்.
வேர், இலை, பூ என்று அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படும் நித்தியகல்யாணிச் (சுடுகாட்டுமல்லி) செடியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்தச் செடியில் இரண்டு வகை நிறங்களில் பூக்கள் காணப்படும்.
வெள்ளை நிறப் பூக்கள் மற்றும் பிங்க் நிற பூக்கள். நிறங்கள் வெவ்வேறாக இருப்பினும் இதற்கு ஒரே மருத்துவ குணங்கள் தான்.இவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றி காண்போம்.
நித்திய கல்யாணி பயன்கள்: Nithyakalyani Benefits in Tamil
சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகச் சிறுநீர் போக்கு மற்றும் அதிக வியர்வை மற்றும் அதிக பசி இந்த பாதிப்புகளை சரி செய்ய இவற்றின் பூக்கள் பயன்படுகின்றன.
நித்தியகல்யாணி பூவை 10 பூக்கள் வீதம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டர் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதனை ஒரு நாளைக்கு நாலு வேளை வீதம் குடித்து வருகையில் இந்தப் பிரச்சனை முற்றிலுமாக தீரும்.
இந்த செடியின் துளிர் இலைகளைப் பறித்து அதை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் சாப்பிட்டுவர பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு நடுநிலை ஆக்கப்படும். மற்றும் வெள்ளைப்படுதலை முற்றிலுமாகக் குணப்படுத்தும்.
இதன் வேரை அரைத்து சூரணமாக செய்து 50 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு போட்டு கொதிக்க வைத்து 48 நாட்கள் குடித்துவர சர்க்கரை நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும்.
இந்த நித்திய கல்யாணி பூவின் சாறு புற்றுநோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
இந்தப் பூவை வீட்டின் முன்பு வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து வரும் நறுமணங்கள் காற்றில் கலப்பதால் அதை சுவாசிக்கும் போது மன அழுத்தம் மனநோய் அனைத்தும் சரியாகிவிடும்.
இந்தப் பூ அரசின் மானியங்களோடு பணப்பயிராக தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகின்றன.