கரை கடந்த புயல் ! புயலின் வேகத்தை மிஞ்சிய முதல்வர் !

Photo of author

By Sakthi

நிவர் புயல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

நிவர் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது இதன் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்து இருக்கின்றது பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து இருக்கின்றனர் மரங்கள் விழுந்த காரணத்தால் மின்கம்பங்கள் சாய்ந்து இருக்கின்றனர் வீடுகளுடைய கூரைகள் காற்றில் பறந்து விட்டனர்.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் வேலைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் மீட்புக்குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்து இருக்கின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டிருக்கும் சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் கடலூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.