என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

Photo of author

By Sakthi

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

Sakthi

நிவர் புயல் சம்பந்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கின்றது என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கின்றார் .

வங்க கடலில் உருவாகி இருக்கின்ற நிவர் புயல் மாமல்லபுரத்திற்கு, புதுச்சேரிக்கும், இடையே நாளையதினம் கரையை கடக்க இருக்கின்றது. இந்த புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதோடு ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைக்கவும், மற்றும் தாழ்வான இடங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட இருக்கின்றது இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டறிந்து இருக்கின்றார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் நிவர் புயல் சம்மந்தமாக சூழ்நிலை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்து இருக்கின்றேன் பாதிக்கப்படும் பகுதிகளில் இருக்கும் மக்களின் நலனுக்காக இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார்.