ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி இணைந்திருந்தாலும் எடப்பாடி வேறொரு திட்டம் மூலம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அரசியலில் தற்போது நுழைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதிமுக பாஜக மீண்டும் இணைந்ததால் விஜய் சற்று அதிருப்த்தியில் உள்ளாராம். இவரும் அதிமுகவின் கூட்டணிக்கு தான் பெரும் வாரியாக எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் தொகுதி ஒதுக்கீடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அதிகளவு டிமாண்டுகளை விஜய் வைத்ததால் எடப்பாடி நிராகரித்துவிட்டார். மேற்கொண்டு திமுகவின் கூட்டணி கட்சிகளையும் வலுவிழக்க திட்டமிட்டார். ஆனால் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதாக தெரியவில்லை. இதனால் யாருடனும் கூட்டு இல்லாமல் தனித்து இருக்கிறார். இந்த சூழ்நிலை தமக்கு லாவகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளார்.
நாம் திமுக- வை வீழ்த்துவதற்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம், ஆனால் கொள்கை அடிப்படையில் வேறு தான் எனக் கூறியுள்ளார். இதனால் அதனை சுட்டிக்காட்டி திமுகவை எதிர்க்கும் கட்சிகளை தனி அணியாக கூட்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் விஜய் சீமான் உள்ளிட்டவர்களை இந்த அணியில் சேர்த்து தேர்தலில் நின்றால் கட்டாயம் நமக்கு தான் வெற்றி. இதனால் இனிவரும் நாட்களில் விஜய் குறித்து எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க கூடாதென நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.