அண்ணாமலை இல்லை.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க இது தான் சரியான டைம்!! சொல்லியடிக்கும் எச் ராஜா!!

Photo of author

By Rupa

 

ADMK BJP: அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைப்பது குறித்து எச் ராஜா மத்திய மந்திரி அமித்ஷா வை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பும் வரை 9 பேர் கொண்ட குழு எச் ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கவனிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் சார்ந்த பார்வையில் அண்ணாமலை இல்லாத இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக நினைக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற முடிவில் அண்ணாமலை இருந்தாலும் கட்சியின் உள்ளிருப்பவர்கள் அதற்கு பெரும்பாலும் ஆதரவு கொடுக்கவில்லை. பலரது கைகள் இவரின் முடிவுக்கு எதிராகவே ஓங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அண்ணாமலை இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இவ்வாறு இருக்கும் பொழுது எச். ராஜா எப்பொழுதும் தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார்.

கடந்த முறை அளித்த பேட்டியில் திமுக, முருகன் மாநாடு நடத்தியது இந்துக்களுக்கு விரோதம் அளிப்பது மட்டுமின்றி மக்களை ஏமாற்றுவதற்காக தான் இப்படி செய்கிறார்கள் என கூறினார். இதையடுத்து அமித்ஷா மற்றும்  ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோரையும் சந்தித்துள்ளார். இதன் பின்னணியாக பேசப்படுவது அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தான் என கூறுகின்றனர். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியின்றி நம்மால் முன்னோக்கி செல்ல முடியாது என்றும் இதனால் அதிமுகவின் கூட்டணி அவசியமானது என அமித்ஷாவிற்கு எச் ராஜா எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவிற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர். அண்ணாமலை வருவதற்குள் அதிமுகவுடன் பழைய பரஸ்பர உறவை கொண்டு வர வேண்டுமென்பதில் தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது.