வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரி கடந்த சனிக்கிழமை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திவிட்டு ஒன்றாக வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும், அதுவரையும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்த முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர், இந்நிலையில், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற வழக்கையும் இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.