தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை! கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமக தலைவர் சீமான் கருத்து!!

Photo of author

By Sakthi

தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை! கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமக தலைவர் சீமான் கருத்து!
நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி வெளியானது. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேல் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெற்றி குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் “என்னைப் பொறுத்தவரை கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒன்றுதான். கர்நாடக மக்கள் தங்களுக்கு ஆட்சி மாற்றம் தேவை என்பதால் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். காங்கிரஸ், பாஜக இந்த இரண்டு கட்சிகள் தான் கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றது. கட்சிகள் இரண்டு என்றாலும் காவிரி உரிமை தொடர்பான பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் அவர்களின் முடிவுகள் இருக்கும். இதனால் யார் வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை” என்று கூறியுள்ளார்.