இனி தங்கம் வாங்க வாய்ப்பில்லையா? சவரனுக்கு ரூ 224 உயர்ந்து விற்பனை!
கடந்த மாதம் பண்டிகை தினங்களாக இருந்ததினால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்துடனே விற்பனையாகி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் பெற்றது. ஒரு சில தினங்களிலேயே தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.
கடந்த வாரம் முதல் குறைந்து விற்பனையாகி வந்தது. அப்போது இல்லத்தரசிகள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ48 உயர்ந்து ஒரு சவரன் 41656க்கு விற்பனை ஆனது.
மேலும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ஆறு ரூபாய் உயர்ந்து 5207 க்கு விற்பனையானது. இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 224 ரூபாய் உயர்ந்து ரூ.41,850 க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து 5235க்கு விற்கப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.