ஐ சி ஐ சி ஐ வங்கியில் இந்த திட்டம் முடிவுக்கு வருகிறது! வெளியான அதிரடி அறிவிப்பு!

0
121

அண்மையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இந்த சமயத்தில் முக்கிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டிவிகிதத்தை உயர்த்த தொடங்கினர். சிறு முதலீட்டாளர்களுக்கு அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வட்டியை உயர்த்தி அறிவித்தனர்.

இதற்கு முன்பாகவே ஐ சி ஐ சி ஐ வங்கி குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கக்கூடிய கோல்டன் இயர்ஸ் பிக்சட் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் பல சலுகைகளையும் அறிவித்திருந்தது. இந்த சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள்.

இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதில் முதலீடு செய்ய முடியாது. ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து பலன்களை அனுபவிப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஐசிஐசிஐ வங்கி இந்திய குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் விகிதத்தை விடவும் கூடுதலாக 0.10% வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் திட்டத்தின் செயல்பாட்டின் போது புதுப்பிக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கி வந்தது. இந்த நிலையில் இந்த திட்டம் அக்டோபர் மாதம் 7ம் தேதியான நேற்றுடன் நிறைவு பெற்றதாக அறிவித்திருக்கிறது.

ஐ சி ஐ சி ஐ வங்கியின் கோல்டன் இயர்ஸ் திட்டத்தின் காலம் 5 வருடங்கள் மற்றும் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரையில். இதில் பொதுமக்கள் 6 சதவீதம் வட்டி வீகிதத்தை பெறுவார்கள். இது வழக்கமான விகிதங்களுக்கு மேல் 60 பி பி எஸ் கூடுதல் வட்டியாகும். ஐசிஐசிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு குறைவாக பிக்செட் டெபாசிட் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் பொருந்தும்.

கோல்டன் இயர்ஸ் திட்டத்தில் பணத்தை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கு இந்த வங்கி அபராதம் விதித்துள்ளது ஃபிக்சட் டெபாசிட் திட்டம் திறக்கப்பட்டு அது முன்கூட்டியே திரும்ப பெறப்பட்டால் ஐந்து வருடங்கள் ஒரு நாளுக்கு பிறகு பொருந்தக்கூடிய அபராத விகிதம் 1.10% ஆகும். இந்தத் திட்டத்தில் பணம் முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டாலும் இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.