இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு…
ஆளும் மத்திய அரசான மோடி அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீரமானம் தொடர்பான விவாதம் இன்று(ஆகஸ்ட்8) நாடாளுமன்றத்தில் தொடங்குவதை அடுத்து மோடி அரசு இதிலிருந்து தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு.நாள் முன்னர் மணிப்பூர் பெண்களின் நிர்வாண வீடியோ வெளியாகி இன்று வரை நாட்டையே உலுக்கி வருகின்றது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாகவே நாடாளமன்றத்தில் பெரும் பிரச்சனையாக காணப்பட்டு வருகின்றது.
மழைகால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களை பிரதமர் மோடி அவர்கள் சந்தித்தார். அப்பொழுது பிரதமர் மோடி அவர்கள் “மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. எனது இதயத்தில் இதனால் கோபம் நிறைந்து வலிக்கின்றது. மணிப்பூரில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எந்தவொரு குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கின்றேன். முழு வலிமையை பயன்படுத்தி சட்டம் தனது கடமையை செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்த கொடுமையான சம்பவம் மன்னிக்க முடியாத ஒன்று” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு உள்ளே பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் சம்பவம் பற்றி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டனர். மழைகால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையில் இந்த நிலை கடந்த வாரம் முழுவதும் இருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் அனைவரும் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் சம்பவம் குறித்து லோக் சபையில் பிரதமர் மோடி அவர்கள் பேச வேண்டும் என்பதும், மாநிலங்களவையில் இது பற்றி விரிவாக விசாரிக்க அனுமதா அளிக்க வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் அவையின் எந்தவொரு நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.
இந்த நிலையித் மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் “லோக் சபையில் மணிப்பூர் சம்பவம் கூறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார். ஆனால் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மணிப்பூர் சம்பவம் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலூயில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய்சிங், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ரஜானி பாட்டில் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி நாடாளுமன்றத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணி ஆளும் மத்திய அரசான பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நோட்டிசை அளித்தனர். அந்த நோட்டிஸை சபாநாயக்கர் ஓம் பிர்லா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணியின் எம்பிகள் பிரதமர் மோடி அரசின் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீரமானம் தொடர்பான நோட்டிஸ்க்கு ஆதயவு அளித்துள்ளனர். பின்னர் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி இது பற்றி விவாதம் நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் அறிவித்தார்.
இதையடுத்து இன்று(ஆகஸ்ட்8) எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டிஸ் தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஆகஸ்ட் 10ம் தேதி தொடர்பாக உரையாற்றவுள்ளார்.