டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

0
34

 

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு…

 

 

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் அதாவது CFO பதவியில் இந்தியர் ஒருவரை நியமித்து எலான் மஸ்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர். இவர் போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ் போல பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை செய்தார். தற்பொழுது சமீபத்தில் டுவிட்டரின் பெயரையும் சின்னத்தையும் மாற்றி வைத்து எக்ஸ் என்ற பெயரில் புதிப்பித்துள்ளார்.

 

 

எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து விற்பனை.செய்வதில் முன்னணி நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜா என்பவரை தலைமை நிதி அதிகாரியாக அதாவது CFO என்ற பதவியில் நியமனம் செய்துள்ளார்.

 

 

இந்தியாவை சேர்ந்த வைபவ் தனேஜா அவர்கள் டெஸ்லா நிறுவனத்தில் ஏற்கனவே தலைமை கணக்கியல் அதிகாரியாக செயல்பட்டு வந்த.நிலையில் தற்பொழுது அவருக்கு கூடுதலாக தலைமை நிதி அதிகாரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்த சச்சரி கிர்கோர்ன் அவர்கள் பதவி விலகியதை அடுத்து புதிய சி.எப்.ஓ-வாக வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

தற்பொழுது தலைமை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வைபவ் தனேஜா அவர்கள் டெஸ்லா நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனத்தில் சி.ஏ.ஓ அதிகாரியாக பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மேலும் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

 

 

டெஸ்லா நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் சோலார் சிட்டி என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியது. அந்த சோலார் சிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வைபவ் தனேஜா அவர்கள் கடந்த 2017ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார்.

 

 

சோலார் சிட்டி நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் வைபவ் தனேஜா அவர்கள் 2016ம் ஆண்டு வரை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் இணைந்த வைபவ் தனேஜா தற்பொழுது தலைமை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.