தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீளும் 11 மாவட்டங்கள் – பொதுமக்கள் நிம்மதி

Photo of author

By Parthipan K

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது.

தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்கள் மெல்ல கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இந்த மாவட்டங்களும் விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஆகிவிடும்.