இவர்களுக்கு சுங்க கட்டணம் இல்லை!! நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

சுங்க கட்டணம்: டோல்கேட்டிலிருந்து 20 கி மீ தூரம் பயணம் செய்பவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க மாட்டாது என நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளின் கட்டணமானது இம்மாதம் முதல் உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது.மேற்கொண்டு ஒவ்வொரு வாகனத்தினை பொறுத்து ரூ 5 முதல் 150 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்திலிருந்து இதனை ரத்து செய்யும்படி கோரிக்கை ஒன்றை வைத்தனர். இதன் மூலம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தெரிவித்தனர்.

இவ்வாறு இருக்கையில் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இனி டோல்கேட்டில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து திரும்புபவர்களிடம் கட்டாயம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு 20 கிலோமீட்டர் அடுத்து எவ்வளவு தூரம் செல்கிறார்களோ அதனை கணக்கிட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டமானது சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கொண்டு ட்ராவல்ஸ் மூலம் பயணம் செய்பவர்களுக்கு இது ஏற்றது. டோல்கேட்டில் இருந்து குறைந்தபட்ச தூரம் பயணம் செய்பவர்கள் கூட சுங்க கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டியிருந்தது. இதனை தவிர்க்கும் விதமாக தற்பொழுது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.