சின்னத்தம்பி செஞ்ச சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது! நடிகர் பிரபு ஒரு பார்வை!

0
26

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனின் மகனாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய நடிப்பு திறமையால் உயர்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபு. இவரை ஒரு போலீஸ் ஆபிசர் ஆக்குவது தான் தந்தை சிவாஜியின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் பிரபுவின் சித்தப்பா சண்முகம் இவரை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டு சங்கிலி என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க வைத்தார்.

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 230 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். 140 படங்களுக்கு மேல் ஹீரோவாகவும், மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் பிரபு. அதேபோல எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த ஒரே நடிகர் பிரபு தானாம். 1988 ஆண்டுகளில் பிரபு நடிப்பில் மொத்தம் 14 படங்கள் வெளியானது.

அந்த 14 படங்களில் 13 படங்கள் வெற்றி பெற்றது. ஒரே வருடத்தில் 13 வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் பிரபு தான். அதேபோல 1991 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் வெளியான சின்னத்தம்பி படம் 46 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ஒரு நடிகரின் படம் 46 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது பிரபுக்கு தானாம். அதேபோல பிரபு கதாநாயகனாக நடிக்கும் படங்கள் பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வசூல் செய்யுமாம். தமிழ் சினிமாவில் 40 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் பிரபு தான்.

Previous articleநீ எல்லாம் கிராமத்து கதை பண்ணத்தான் லாயக்கு! சிட்டி சம்மந்தமான படத்தை எடுக்க நீ சரிப்பட்டு வரமாட்ட! சிகப்பு ரோஜாக்கள் குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!
Next articleமுருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!