என்ன செய்தாலும் முடி வளர்ச்சி இல்லையா… அசுர வேகத்தில் முடி வளர இதை செய்யுங்க!!

Photo of author

By Sakthi

 

என்ன செய்தாலும் முடி வளர்ச்சி இல்லையா… அசுர வேகத்தில் முடி வளர இதை செய்யுங்க…

 

பெண்களுக்கு இருக்கும் பல கவலைகளில் முக்கியமான கவலை என்ன என்றால் அது முடி பற்றிய கவலை தான். அதாவது பெண்கள் என்னதான் சேம்பு, சீவக்காய் என்று தலைக்கு தேய்த்து குளித்தாலும் முடி வளர்ச்சி என்பது இருக்காது.

 

தலை முடி நீளமாக வளர வேண்டும் என்று பலவிதமான எண்ணெய்களையும் சாம்புகளையும் பயன்படுத்துவார்கள். ஆனால் அதன் தீர்வா இருக்கும் முடிகள் அனைத்தும் சிறிது சிறிதாக உதிரத் தொடங்கும். மேலும் முடி வளர்ச்சி என்பது இருக்காது.

 

எனவே முடி வளர்ச்சி நீளமாக அசுர வேகத்தில் வளர வேண்டும் என்று நினைக்கும் பொண்களுக்கு இந்த பதிவில் அருமையான மருந்து தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

 

நீளமான தலைமுடி வளர்வதற்கு பயன்படுத்தும் மருந்து தயாரிக்க தேவையான பொருள்கள்…

 

* ஆலிவ் விதைகள்

 

* நல்லெண்ணெய்

 

* பேபி ஆயில்

 

* தேங்காய் எண்ணெய்

 

மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள ஆலிவ் விதைகளை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆலிவ் விதைகள் மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு பேபி ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இறுதியாக இந்த பவுலில் அரை எலுமிச்சூ பழத்தை அறுத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை வெயில் அதிகமாக உள்ள இடத்தில் அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை வைக்க வேண்டும்.

 

பயன்படுத்தும் முறை…

 

இந்த எண்ணெயை அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் வெயிலில் வைத்த பிறகு எடுத்து தலைக்கு தேய்க்க வேண்டும். இவ்வாறு இதை பயன்படுத்தி வந்தால் தலையில் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் முடியை அடர்த்தியாக வளரச் செய்யும்.