முக்கிய புள்ளிகளே இல்லை.. இதெல்லாம் எங்களுக்கு தான்!! அதிமுக-வை சூறையாட அமித்ஷா போட்ட பிளான்!!

0
127
no-important-points-this-is-all-for-us-amit-shahs-plan-to-loot-aiadmk
no-important-points-this-is-all-for-us-amit-shahs-plan-to-loot-aiadmk

ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வரும் ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதையிலிருந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஆளும் கட்சி பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் சமீபத்தில் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிலிருந்து வரும் செங்கோட்டையன் விஜய்யுடன் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பல முக்கிய தடைகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக கூறுகின்றனர். இதனால் எடப்பாடி முக்கிய தலைகளின்றி  அவஸ்திப்படும் நிலை உண்டாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக இடம் பிடித்து விட வேண்டும் என எண்ணுகிறது. எடுத்துக்காட்டாக பீகாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை பெண்களின் வாக்கு வங்கியானது உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்தல் கட்டத்தில் ஒவ்வொரு கணக்கிற்கும் 10 ஆயிரம் அனுப்பியதுதான்.

அதேபோல பெண்களை கவரும் வகையில் பலவித அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கு அதிக அளவு தொகுதிகளையும் கேட்கின்றார்களாம். அதிமுகவில் பிரபலமான முக்கிய தலைகள் ஒவ்வொருவராக கழட்டி விடும் நேரத்தில் அதனை சமாளிக்க தாங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் எடப்பாடியிடம் கிட்டத்தட்ட 100 சீட்டுக்கும் மேல் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் எடப்பாடியோ இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்து வரவில்லையாம். பெரும்பான்மையான நிர்வாகிகள் இல்லாவிட்டாலும் தாங்கள் எந்த தொகுதிகளிலெல்லாம் நின்றோமோ அந்த தொகுதி எங்கள் வசம் தான் இருக்கும் என நேர் எதிராகவே கூறுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Previous articleFIA ஸ்ரீகாந்த் அக்காப்பள்ளியை 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தட்டுகிறது!!
Next articleபெண்களின் அக்கவுண்டுக்கு வரும் 15000.. வாக்கை கவர வரப்போகும் புதிய திட்டம்!!