ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதிலும் கோர தாண்டவம் ஆடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தாலும் பல மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளால் இன்னும் அது முழுமையாக மக்களை சென்று சேர்வதில்லை. இது பல பேரின் உயிர்கள் பலியாக காரணமாக அமைகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் என்னவோ அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து பல திட்டங்களை வகுத்து வருகிறது.
சமீபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தடை எற்பட்டதால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடப்பட்டது.இதேபோல் பல மரணங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தேறிவருகிறது.
மிகக்சிறிய மாநிலமான கோவாவிலும் இதே போல் துயரச்சம்பவம் நடந்தேறி அனைவரின் மனதையும் வேதனையடைய வைத்துள்ளது.கோவாவின் தலைநகரான பானாஜியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்த மருத்துவமனையில் உள்ளவர்களை பெரும் அதிர்சிக்குள்ளாக்கி உள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தில் 2 மணி முதல் 6 மணி வரை உள்ள கால கட்டத்தில் இறந்தது தெரியவந்தது.இதுபற்றி மாநில சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறிகையில், இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும், அதற்கு காரணம் ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலே என்றும் கூறினார்.
மேலும் அவர் இதைப்பற்றி தெரிவிக்கையில் இந்த சம்பவம் குறித்து ஹைகோர்ட் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஒரு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றும்,அது இந்த விசயத்தில் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் எனவும் தெரிவித்தார்.இந்த மருத்துவமனைக்கு நேற்று முன் தின நிலவரப்படி 1200 ஜம்போ ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தேவை இருந்ததாகவும், ஆனால் 400 சிலிண்டர்கள் மட்டுமே வந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக முதல்-மந்திரி பிரமோத் சவந்த் (பா.ஜ.க.), பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு கோவா அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுகளை பார்வையிட்டார்.மேலும் அவர் நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து பேசினார்.
இது பற்றி நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வார்டுகளில் உள்ள ஆக்சிஜன் பிரச்சனைகளை சரிசெய்யப் பட வேண்டும் என்றும்,ஆக்சிஜன் சீராக வழங்குவதை உறுதி செய்ய வார்டு வாரியாக வழிமுறை வகுக்கப்படும் என கூறினார்.
மேலும் அவர் மருத்துவ ஆக்சிஜனுக்கும், சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என்றாலும்,உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல உள்ள தடைகளை தகர்ப்போம் என கூறியுள்ளார்.