11 நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணம் இவர்கள்தான்! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெகன்மோகன் ரெட்டி!

0
107

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரூயா என்ற தனியார் மருத்துவமனையில் ஐசியு வார்டில் சுமார் 700 நோய்த்தொற்று பாதித்தவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல சாதாரண வார்டில் 300 நோயாளிகள் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் திடீரென்று குறைந்து போனதால் மாற்று ஆக்சிஜன்களை இனைப்பதற்கு தாமதமாகி இருக்கிறது. இதன் காரணமாக, 11 நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ரூயா மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார். அதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் திருப்பதி மருத்துவமனையில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில் நோய்தொற்று தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை ஐ .சி .எம் ஆர் என்.ஐ.விக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்.