உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!!

0
225
No license for your vehicle? So be ready to pay Rs.4000!!
No license for your vehicle? So be ready to pay Rs.4000!!

உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!!

நம் நாட்டில் சாலை பாதுகாப்பு என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை.இதனால் தினந்தோறும் அதிக வாகன விபத்துகள் ஏற்படுகிறது.இதன் காரணமாக நம் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு இருப்பது கட்டாயமாகும்.காப்பீடு இல்லாத வாகனத்திற்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி போக்குவரத்து துறையானது காப்பீடு இல்லாத வாகனத்திற்கு மோட்டார் வாகன சட்டம்,1988,பிரிவு 196 இன் படி அபராதம் விதிக்கும் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் உங்களிடம் இருந்து ஓட்டுநர் உரிமம்,பதிவுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை போக்குவரத்து துறை பறிமுதல் செய்துவிடும்.

காப்பீடு இல்லாமல் வாகனம் ஒட்டியதற்காக டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலட்கள் மூலம் அபராதத்தை செலுத்த வேண்டும்.அல்லது அருகிலுள்ள போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்று அபராதம் செலுத்த வேண்டும்.நீங்கள் முதல்முறை பிடிபட்டால் ரூ.2,000 அபராதமாக விதிக்கப்படும்.

இந்த குற்றம் தொடர்ந்தால் ரூ.4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை காப்பீடு இல்லாமல் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் புதுச்சேரி போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.

Previous articleசவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!
Next articleSinger Suchitra: வில்லங்கத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா.. கோபத்தில் நடிகை த்ரிஷா!