இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்!
கர்நாடக மாநிலம் முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு இல்லை,இ- பாஸ் தேவை இல்லை, 14 நாட்கள் தனிமை இல்லை பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வரலாம் என உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் முடங்கிய நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ பாஸ் தேவை எனவும், அதேபோல் மாநிலங்களுக்கிடையே செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் வேண்டும் எனவும் பல்வேறு விதிமுறைகளை விதித்து ஊரடங்கு பின்பற்றப்பட்டு இருந்தது.
கடந்த மாதங்களாக ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் மாநில அரசுக்கு ஏற்றவாறு தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்ற அனுமதியும் கொடுத்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் ஆணையை ஏற்று போக்குவரத்துக்கு அனுமதி அளித்திருக்கிறது. மேலும் மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கு இ இ-பாஸ் தேவையில்லை எனவும், அதே போல் மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமை வேண்டாம் எனவும், அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோருக்கு எந்த ஒரு கொரோனா பரிசோதனைகள் தேவையில்லை. மேலும் ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் எந்தவிதமான கொரோனா பரிசோதனையும் தேவையில்லை எனவும் கூறியுள்ளது.
இதனால் தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.