இனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!!

Photo of author

By CineDesk

இனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!!

CineDesk

No longer 5 is only 1 !! Motorists in shock !!

இனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!!

கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக   கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குசொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுத்தல் மற்றும் சாலை விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது  போன்ற பல விதிமுறைகளைப்  பின்பற்றி வந்தனர். மேலும் இப்பொது நோய்த்தொற்று சிறிது கட்டுப்பாட்டிற்கு வந்ததாக எண்ணி பல தளர்வுகள் ஏற்ப்பட்டது.

தற்போது அதி வேகமாகப் பரவும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சாலையில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது. அதில் முதல் அதிர்ச்சி வாகன ஓட்டுனர்களுக்கு தான். தமிழக அரசு வாகன போக்குவரத்து சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவந்து உள்ளது. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் கீழ் பல விதிமுறைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாக சட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இந்த வகையில் புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5,௦௦0 முதல் 60,௦௦௦ வரை அபராதம் விதிகக்ப்பட்டுள்ளது இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. காலாவாதியான ஓட்டுனர் உரிமத்தை புதிபிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது  தமிழகத்தில் ஓட்டுனர் உரிமத்தின் காலஅவகாசம் 5  ஆண்டுகளில் இருந்து  1  ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் மக்களுக்கு அத்திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மற்றும் 1 ஆண்டுகளுக்குள் புதுபிக்க தவறினால் மீண்டும் விண்ணப்பித்து புதிய ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.