இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

Photo of author

By Hasini

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

Hasini

No longer have to treat the public with respect! Action as told by the High Court!

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இரு நாட்களுக்கு முன் 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்.

அப்போது வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் அவமரியாதையாக என்னிடம் பேசினார்கள் என்றும், குறிப்பாக எனது மகளின் முன் எடா வா, போ என மரியாதைக் குறைவாகவும், இழிவாகவும் பேசினார்கள். பொதுமக்களை கௌரவமாக நடத்த போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் போலீசார் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக் கூடாது. அதுவும் போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. மேலும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களை அநாகரிகமாக நடத்துவதை, வளர்ந்த நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே கேரளா முழுவதும் போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை வா, போ என்று ஒருமையில் அழைத்துப் பேச கூடாது. அதேபோல் எடி அதாவது தமிழில் வாடி, போடி வாடா, போடா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக கேரள போலீஸ் டிஜிபி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து உடனடியாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.