2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை பெற திமுக முடிவு செய்து அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வந்த நேரம் திமுகவுக்கு நேரம் சரியில்லை என்று திமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே திமுகவின் மூத்த தலைவர்களான அன்பழகன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அடுத்தடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபிபி சாமி மற்றும் குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் ஆகிய இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணமடைந்துள்ளனர். இதெல்லாம் நல்ல அறிகுறியாக இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் வரவுக்கு பின்னரே இம்மாதிரியான நிகழ்வுகள் வருவதாகவும் உடனடியாக அவருடைய ஆலோசனை பெறும் முடிவை திமுக தலைவர் கைவிட வேண்டும் என்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் செவிசாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்