எவ்வளவு முயன்றாலும் உங்கள் ஆதார் கார்டில் இதை மட்டும் சேஞ்ச் பண்ணவே முடியாது!!
ஆதார் எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் சலுகைகள் பெற ஆதார் கட்டாயமாகும்.வங்கி கணக்கு திறப்பதில் தொடங்கி சிம் கார்டு பெறுவது வரை ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது.
ரேசன் கார்டு,பான் கார்டு,வங்கி கணக்கு எண்,மின் இணைப்பு எண் அனைத்திற்கும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கையில் ஆதாரில் உள்ள உங்கள் பெயர்,முகவரி,பிறந்த தேதி,பாலினம் உள்ளிட்ட தகவல்கள் பிழை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து இடங்களிலும் ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.ஆதாரில் புகைப்படம்,முகவரி,மொபைல் எண் உள்ளிட்டவற்றை எத்தனை முறை வேண்டுமானாலும் உரிய கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் சில தகவல்களை ஒருமுறைக்கு மேல் மாற்ற இயலாது என்பது தங்களுக்கு தெரியுமா? ஆம் ஆதாரில் குறிப்பிட்டுள்ள பாலினத்தை ஒருமுறை மட்டுமே மாற்ற இயலும்.புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்கும் போது பாலினத்தை தவறாக பதிவு செய்திருந்தாலோ அல்லது பாலினம் மாறி இருந்தாலோ அதை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து ஒருமுறை மாற்ற இயலும்.
அதேபோல் ஆதாரில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை கல்வி சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள பிறந்த தேதியை சான்றாக வைத்து ஒருமுறை மாற்றிக் கொள்ள முடியும்.அடுத்து ஒருமுறைக்கு மேல் புதுப்பிக்கவே முடியாதது தங்களின் பெயர்.
ஆதார் கார்டிற்கு விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் பெயர் பிழையில்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.ஒருவேளை ஆதார் கார்டில் பிழையுடன் உங்கள் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஒருமுறை மட்டுமே அதனை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.