எப்படி சுட்டாலும் இட்லி கல் போல் வருதா!! இப்படி செய்து பாருங்கள் 100% பூப்போன்ற இட்லி கிடைக்கும்!!

0
302
#image_title

எப்படி சுட்டாலும் இட்லி கல் போல் வருதா!! இப்படி செய்து பாருங்கள் 100% பூப்போன்ற இட்லி கிடைக்கும்!!

இட்லிக்கு மாவு அரைக்கும்போது சில சமயங்களில் தண்ணீர் ஆகவோ, கட்டியாகவோ அல்லது உளுந்து அதிகமாகவோ அல்லது உளுந்து குறைவாகவோ பக்குவம் தவறிவிடும். இப்படி சொதப்பலான மாவில் இட்லி செய்யும்போது இட்லி சரியாக வராது. உளுந்து அதிகமாகிவிட்டால் இட்லி துணியோடு ஒட்டிக்கொள்ளும். இட்லி சப்பையாக வரும். உளுந்து குறைவாகி விட்டால், இட்லி கல்லு போல வரும். எவ்வாறு மாவு அரைத்தால் பூ போன்ற இட்லி பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

இட்லி மாவு அரைக்கும்போது அதோடு ஒரு கைப்பிடி ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு மாதிரி இருக்கும். இட்லி மாவுடன் ஒரு சில ஆமணக்கு விதைகளை கொட்டையை சேர்த்து அரைத்தாலும் இட்லி குஷ்பு இட்லி மாதிரி பூ மாதிரி இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1. புழுங்கல் அரிசி-2 kg
2. பச்சரிசி- 1/2kg
3. உளுத்தம் பருப்பு -3/4kg
4. வெந்தயம்-1 ஸ்பூன்
5. ஜவ்வரிசி-3/4kg
6. கல் உப்பு-2 ஸ்பூன்
7. ஆமணக்கு விதை -8-10

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசி, ஆமணக்கு விதை போன்றவற்றை 3-4 முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொருட்கள் உருவானதற்கு தண்ணீர் சேர்த்து 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். இதனை உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாவை இரவில் அரைக்கிறீர்கள் என்றால் காலை முதல் குளிர்சாதன பெட்டியின் வெளியே 8-9 மணி நேரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை குளிர்சாவை பெத்தியில் வைத்துக் கொள்ளலாம். இதனை தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாவு இந்த மாதிரி அரைக்கும் பொழுது உங்களுக்கு மெது மெதுவாக இட்லி கிடைக்கும்.

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. அதனால் மாவு அரைக்கும் போது ஜவ்வரிசி சேர்த்து அரைப்பது உடலுக்கு நன்மையை தரும்.

ஆமணக்கு:

விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். இதனால் அடிக்கடி நம் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள் நம் உடல் ஆரோக்கியம் பெற்று மகிழும்.