நீட்டோ புதிய கல்வி கொள்கையோ எதுவாக இருந்தாலும் அரசு தகர்க்கும்! முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு! 

Photo of author

By Rupa

நீட்டோ புதிய கல்வி கொள்கையோ எதுவாக இருந்தாலும் அரசு தகர்க்கும்! முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “மாணவர்கள் கல்வி பயில எந்த ரூபத்தில் தடை வந்தாலும் அதை தமிழக அரசு தகர்த்து எறிந்துவிட்டு செல்லும். மாணவர்களின் கல்வி தான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இனி காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் அவர் கூறியது போலவே இன்று(ஜூலை15) திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அங்கு உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று நான் உங்கள் முன்னிலையில் மிகவும் மகிழ்ச்சியாக நிற்கின்றேன். பெற்றோர்களின் பாசத்தோடு பள்ளிக்கூடத்திற்கு வரும் குழந்தைகளின் பசியை போக்க நான் உருவாக்கிய திட்டமே காலை உணவுத் திட்டம் ஆகும்.
அரசுக்கு எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. எனக்கு இருக்கும் ஒரே நோக்கம் எந்தவொரு மாணவரும் பசியோடு பள்ளிக்கு செல்லக் கூடாது என்பது தான். அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கின்றது என்றாலும் நாங்கள் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். சங்க இலக்கியங்களில் பசி குறித்து பல பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகள் தான் எதிர்காலத்தின் சொத்துக்கள். எனவே அந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பெற்றோர் இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் பொழுது அந்த வகையான வீட்டில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்” என்று காலை உணவுத் திட்டம் குறித்து பேசினார்.
அதன் பின்னர் தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “மாணவர்கள் கல்வி கற்பதற்கு பசி, நீட், புதிய கல்விக் கொள்கை என்று எந்த விதத்தில் தடை வந்தாலும் அதை தகர்த்து எரிவோம். மத்திய அரசான பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி பேசி வருகிறது. அவசர நிலையின் பொழுது பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசான பாஜக அரசு தயாராக இருக்கின்றதா? பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் செயலை செய்வார்களா?
நீட் தேர்வை தற்பொழுது பல தலைவர்களும் பல மாணவர்களும் எதிர்த்து வருகின்றனர். நீட் தேர்வை முன்பு ஆதரித்தவர்கள் கூட தற்பொழுது நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.   நீட் தேர்வை எதிர்த்த பொழுது கேள்வி கேட்டவர்கள் அனைவரும் தற்பொழுது எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மாணவர்களின் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் தமிழக அரசு குறிக்கோளாக இருக்கின்றது. கல்விதான் திருடமுடியாத சொத்து” என்றும் பேசினார்.